Chad ஜனாதிபதி இறந்த சம்பவத்தை ராணுவ செய்தி தொடர்பாளர் அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வடக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் களத்தில் மோதலில் ஈடுபட்டு வந்த ராணுவ படைகளை பார்வை இடும்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜனாதிபதி Idriss Deby மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை ராணுவ செய்தி தொடர்பாளர் Azem Bermandoa Agouna அரசு தொலைக்காட்சி வாயிலாக உறுதி செய்துள்ளார்.
மேலும் மறைந்த ஜனாதிபதியின் மகன் Mahamat Kaka இடைக்கால அரசு தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 68 வயதான Idriss Deby அந்நாட்டின் 6 வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றதை அறிவிக்கப்பட்ட மறு நாளிலேயே அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.