பெண்ணிடமிருந்து செல்போன் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கருவேலம்பட்டி பகுதியில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பால பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரம்யாவிடம் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ரம்யா திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.