பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் பகுதியில் பரமத்திவேலூர் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சுதாரித்து கொண்ட பெண் தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.
இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் சங்கிலியை விட்டு விட்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.