மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கொங்கபட்டி கிராமத்தில் கட்ட ராமன்-கருப்பாயி என்ற வயது முதிர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பாயி தனது வீட்டில் முன்புற வாசலில் உட்கார்ந்து இருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கருப்பாயி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.