மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்த வாலிபர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாப்பம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். இதனையடுத்து மூதாட்டி சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த வாலிபர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பாப்பம்மாள் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.