வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த 4 பெரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் ராஜசேகர் சித்திகளை முருகானந்தம் ராஜா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து 22 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.