Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம்…. பின்தொடர்ந்த மர்ம நபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்….!!

இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு கலவாசல் பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் இவர்களை பின் தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் திடீரென்று ஜெயசீலனின் மனைவி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயசீலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |