சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியில் லிங்கேஸ்வரி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சம்பவம் நடந்த அன்று கடையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் லிங்கேஸ்வரியை பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து லிங்கேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.