வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு போன மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை சேர்ந்தவர் சத்யா. சத்யாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் செங்கோட்டையில் இருந்து தஞ்சாவூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மொபட்டில் சென்றுள்ளார் சத்யா.
அச்சமயம் வி கே நகர் பகுதியில் சத்யா மொபட்டில் சென்று கொண்டிருக்கையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சத்யாவின் கழுத்தில் கிடந்த 2 1/4 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மிகவும் வேகத்துடன் சென்றுள்ளார்.
நடப்பதை சுதாரித்துக்கொண்ட சத்தியா சத்தம் போட்டுள்ளார். இதனால் அவ்வழியாக வந்தவர்கள் மர்ம நபரை துரத்தியுள்ளனர் இருந்தும் மோட்டர் சைக்கிளில் சென்ற மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சத்யா. சத்யா அளித்த புகாரின் பேரில் சங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.