பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கியனூர் கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் வேம்பின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து வேம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுரேஷ் மற்றும் மதியழகன் ஆகிய 2 பேரும் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.