பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் நிலவாணி விளை பகுதியில் ஓய்வு பெற்ற காவலரான பத்ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா பாய் என்ற மனைவி உள்ளார். இவர் விளவங்கோடு தாலுகா அலுவலத்தில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஸ்டெல்லா பாயிடமிருந்து அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 5 1/2 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா பாய் அவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் தங்க நகையை பறித்து விட்டு வேகமாக தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஸ்டெல்லா பாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.