பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதவள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்ட அமுதவள்ளி சத்தம் போட்டுள்ளார்.
அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்வதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து அமுதவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.