மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூலி குடியிருப்புப் பகுதியில் செல்லகணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அப்பகுதியிலுள்ள வாய்க்கால் பாலம் அருகே நடந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் செல்லக்கண்ணு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.