சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் சூலூர் அருகில் உள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன் பின் முரணாக பேசியதால் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டன.
விசாரணையில் சூலூர் பகுதியில் சில மாதங்களாக நடந்த தொடர் சங்கிலி பறிப்பில அவர்கள் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. அவர்களை விசாரித்ததில் மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் சேர்ந்த ஆகாஷ் , சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவர் கணேஷ் மணி , பாலமுருகன் களையார்கோவில் சேர்ந்த காளீஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர் அவர்கள் 4 பேரையும் போலீசார் சூலூர் கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.