Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது பயனுள்ளதாக இருக்கும்… வழங்கப்பட்ட இரு சக்கர நாற்காலிகள்… துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனத்தின் உதவி…!!

அரசு மருத்துவமனைக்கு புதிதாக 20 இரு சக்கர நாற்காலிகளை துப்பாக்கி நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மருத்துவமனை நிர்வாகம் உள்ளது. இதனால் சமூக பங்களிப்பு நிதி மூலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிறுவனமானது முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 20 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை துப்பாக்கி தொழிற்சாலையின் பாதுகாப்பு அலுவலரான லெப்டினன்ட் கர்னல் கார்த்திக்கேஷ் அரசு மருத்துவமனை டின் வனிதாவிடம் வழங்கியுள்ளார். மேலும் உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |