சக்ரா திரைப் படத்தின் சண்டைக்காட்சி புகைப்படங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். எம் எஸ் ஆனந்தன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட புகைப்படங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இருப்பதினால், சண்டையிடுவது ஷ்ரத்தா ஸ்ரீநாத் என ரசிகர்கள் மனதில் ஆர்வம் எழுந்துள்ளது. உண்மை என்ன என்பது படம் வெளிவரும் போது தெரியவரும். இத்திரைப்படம் மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளிவரும் என தகவலும் வெளியாகியுள்ளது.