ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வரத வீர வெங்கட சத்யநாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அங்கு வரதவீர வெங்கட சத்ய நாராயணா மலை மீது வேகமாக நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த லாவண்யா முடிந்தால் என்னையும் தோளில் தூக்கிக்கொண்டு நடங்கள் என்று சவால் விட்டுள்ளார்.
மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவரும் அவரை தோளில் சுமந்து கொண்டு மலை எறி சென்றுள்ளார். இதைப் பார்த்த சிலர் அதை வீடியோவாக எடுத்ததுடன், அவர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.