Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ….! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது .அதோடு தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது .இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  ட்விட்டர் பதிவில்,’ சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழக அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  ஷாருக்கான், சாய் கிஷோர் உட்பட இளம் திறமையாளர்கள் சிறப்பான மற்றும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .எல்லாரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் ‘இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |