Categories
உலக செய்திகள்

“ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு!”.. எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குவிக்கப்பட்ட காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் வணிக வளாகங்களிலும் மையங்களிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள Northern Virginia என்ற மாகாணத்தில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் மையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமலாக்கம் எச்சரித்திருக்கிறது. எனவே அங்கு பலமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் Washington, DC-க்கு வெளியில் இருக்கும் Fair Oaks Mall-ஐ சுற்றி காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். வணிகவளாகங்கள், போக்குவரத்து மையங்கள் என்று மாவட்டம் முழுக்க அனைத்து முக்கியமான பகுதிகளிலும்  அதிகமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |