Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்…

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து  (அக்.10) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட் டங்கள், புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும், சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

பெரும்பாலான மாவட்டங் கள் மற்றும் புதுவை, காரைக் கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்.

ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகுகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத் திற்கு வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எச்சரிக்கை:

அக்டோபர் 9 முதல் 11 ஆம் தேதி வரை மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத் தில் வீசக்கூடும்.அக்டோபர் 10,11 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 12 ஆம் தேதி அன்று மத்திய மேற்கு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத் தில் வீசக்கூடும்.மீனவர்கள் அந்தத் தேதிகளில் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.ஆழ்கடல் பகுதியில் இருக் கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |