தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் இந்த எட்டு மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக நேற்று தினம் அதிகாரபூர்வமாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்க கூடிய நிலையில் அதன் தாக்கத்தின் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதலே மழை பெய்து கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் இன்று கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.