வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது தற்போது சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காளதேசத்தை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசிக்கும் 28,155 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது 576 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில், தேவைப் பட்டால் கூடுதல் முகாம்களை தயார் செய்யவும் ரெடியாக இருக்கிறோம் என துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். இதேபோன்று மேற்குவங்க மாநிலத்திலும் புயல் காரணமாக அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மழைக் காண முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்துள்ளதோடு, பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.