சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள்.
அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி வானிலை மையம் தகவல்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த இந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழையும், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை மையம் சொல்லி இருக்கிறது.