தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மற்றும் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் கன மழை மற்றும் லேசான மழை பெய்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் தீவிர கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மழை என்பது குறைவாகவே உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சேலம், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். இதனால் மீனவர்கள் செப் 4ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும்,கேரளா, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செப்டம்பர் 3 வரையும் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .