தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.