தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் லேசான மழை இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.