Categories
வானிலை

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடக்கு வங்க கடல், வட மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |