அக்டோபர் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல காற்று திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில்,
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி நெல்லை மதுரை திண்டுக்கல் சேலம் நீலகிரி கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.