டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்பு அதிபர் கிம் ஜாங் அன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த 2 நாட்கள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய சென்றுள்ளார்.
சீன நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி ஜின்பிங். இவர் தற்போது 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். பிற நாடுகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா போன்றபி நாடுகளுக்கு 14 ஆண்டுகளுக்கு பின் பயணம் மேற்கொண்ட முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சீன அதிபரின் வடகொரிய வருகையை யொட்டி அந்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.
ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சீன அதிபர் ஜி ஜின்பிங்க் சந்திக்க உள்ள நிலையில் , அவர் கிம் ஜாங் அன்_ யுடன் பேச்சுவாரத்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுகின்றது.ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.