Categories
அரசியல் மாநில செய்திகள்

 “சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை” முக.ஸ்டாலின் பேட்டி…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த  சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கு மாற்றாக 3_ஆவது அணியை உருவாக்குக முயற்சிகளை மேற்கொள்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ்_வுடனான சந்திப்பு மரியாதையை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட்து.இதைத்தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின்  தெரிவிக்கையில் , தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று கூறினார்.

Categories

Tech |