ரெப்போ ரேட் என்னும் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தினால் பட்ஜெட்டுக்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டத்தொடர் முடிவுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கியில் ஆளுநரான சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார். இதன்மூலம் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவுமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.