ஏப்ரல் 1 முதல் புதிய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயனாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஐஎஃப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நேஷனல் வங்கி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. வங்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, ஏப்ரல் 1 முதல் பழைய ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகள் மாற்றப்படும்.
அதன் பிறகு பழைய குறியீடுகள் இயக்கப்படாது. நீங்கள் பழைய குறியீடை வைத்து ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்தால் அது செல்லுபடியாகாது.எனவே புதிய குறியீட்டை அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் பெறவேண்டும். அதுமட்டுமின்றி ஏப்ரல் 1 முதல் இஎம்வி இல்லாத ஏடிஎம்கலில் பஞ்சாப் நேஷனல் வங்கி பயனாளர்கள் பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவலுக்கு, PNB இன் கட்டணமில்லா எண் 18001802222 மற்றும் 18001032222 (Toll Free) எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.