2023-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு,
ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் ஓபிஎஸ் – இபிஎஸ் அவர்களுக்கான இருக்கை தொடர்பாக ஏதேனும் மாற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு, ஏற்கனவே அவர்களிடம் அதற்கான விளக்கத்தை சொல்லியாச்சு என தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கான இருக்கையில் எந்த வகையிலும் மாற்றமில்லை என்பது உறுதியாகி உள்ளது.