Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பில் மாற்றம் ? முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கின்றார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 16ம் தேதி பள்ளி,  கல்லூரிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அறை ஏற்படக் கூடும் என்ற அச்சம் இருந்த சூழலில் கல்வி நிறுவனங்கள் திறக்க பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால் தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. ஒரு வேளை பள்ளி, கல்லூரிகள் திறக்கும் போது என்னென்ன முடிவுகள் ? எடுக்கவேண்டும். எவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் ? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கின்றார்கள்.

Categories

Tech |