தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் குறிப்பாக ஷாப்பிங் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் படையெடுக்கின்றனர். பொதுமக்கள் பலரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊருக்கு மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதோடு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகமும் சிறப்பு ரயில்களையும் இயக்குகிறது.
இந்த சிறப்பு ரயில்களில் செல்வதற்கான டிக்கெட் முன் பதிவு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கி விட்ட நிலையில், தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முன்பதிவு மையங்கள் நேரம் மாற்றியமைக்கப்ட்டுள்ளது. அதன்படி இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும் ரயில்வே முன்பதிவு மையங்கள் இன்று ஞாயிறு அட்டவணையின் படி இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.