திருச்சி கோட்டம் சீர்காழி ரயில் நிலையம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் இடையே மதிய 3.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.
இந்த ரயில் சிதம்பரத்திலிருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும். அதனைப் போலவே மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் இடையே மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21 , 25, 28ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.50 மணிக்கு 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.