Categories
மாநில செய்திகள்

பராமரிப்பு பணியால் சென்னை மின்சார இரயில் சேவை மாற்றம் ….!!

தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ரெயில் சேவை நேரம் மாற்றப்படுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதில் செல்லும்  36 ரெயில் சேவைகள் வருகின்ற ஜூலை 21_ஆம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு, மதியம் 2 மணி முதல் ரெயில் சேவை தொடங்கும்.அதே போல சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையேயான இரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

Image result for மின்சார இரயில்

 

இதே போல சென்னை-கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் இடையே இரயிலின் சேவை காலை 11 மணி முதல் பிற்பகல் 1.50 வரை இரத்து செய்யப்படுகிறது. வழித்தடங்களில் நடக்கும் பராமரிப்பு பணியின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லும் மின்சார ரெயிலின் சேவை ரத்து செய்யப்பட்டு பயணிகளின் நலன் கருதி சென்னை கடற்கரை- தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் சேவை தொடங்கும் என்று  தெற்கு ரெயில்வே தெரிவிததுள்ளது.

Categories

Tech |