Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாத்துங்க”…. இல்லனா நாங்க சொல்ற மாதிரி சட்டத்த கொண்டு வாங்க…. அதிரடியில் இறங்கிய திமுக….!!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக திமுக உட்பட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதாவது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளதோடு, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆளுநர் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆளுநர் மாளிகையில் மக்கள் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

இதேப் போன்று தமிழக ஆளுநர் நடந்து கொள்வதால் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுநர்களை வைத்து பாஜக அரசு தனி ஆட்சி நடத்துவதாக ஆளுங்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு மனுவில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும்‌ நிலையில், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளது.

இந்த தனிநபர் மசோதாவை திமுக கட்சியின் எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி பேசினார். அவர் பேசியதாவது, மாநிலங்களில் ஆளுநர்கள் தனி ராஜ்ஜியம் நடத்துவதோடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துகின்றனர். எனவே மாநில முதல்வர்களின் ஆலோசனையுடன் ஆளுநர்களை கொண்டு வர சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் ஆளுநர்களை நியமித்தல் மற்றும் அவர்களை நீக்கும் சட்டத்திலும் ‌ திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |