Categories
தேசிய செய்திகள்

பழையதை மாற்றி…. வண்ண வாக்காளர் அட்டை பெற…. செல்போனிலில் விண்ணப்பிப்பது எப்படி…?

பழைய வாக்காளர் அட்டையை புதிய வண்ண அட்டையாக மாற்ற செல்போனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

நம்முடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை வண்ண அடையாள அட்டையாக உள்ளது. அதை மாற்றி புதிய அடையாள அட்டையாக நீங்களே உங்களுடைய செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற முடியும்.

இதற்கு முதலில் https://www.nvsp.in என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு என்று தனியாக ஒரு option இருக்கும். அதில் உங்களுடைய முழு விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் தற்போதைய புகைப்படம், முகவரி, அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்

Categories

Tech |