Categories
உலக செய்திகள்

“எங்கயோ போய்ட்டீங்கப்பா!” தூக்கி வீசப்பட்ட முகவசங்களை வைத்து சார்ஜர் தயாரிபு… அசத்திய இஸ்ரேல் நிறுவனம்…!!!

தைவானில் இருக்கும் செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்க கூடிய ஒரு நிறுவனமானது உபயோகப்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து செல்போன் சார்ஜர் தயாரித்திருக்கிறது.

உலக நாடுகள் முழுக்க கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் முக கவச பயன்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. எனினும் ஒரு முறை பயன்படுத்திய பின் குப்பையில் எறியப்படும் முக கவசம் மக்குவதற்கு சுமார் 450 வருடங்கள் ஆகும் என்று போஷன் ஆசிய அமைப்பு எச்சரித்திருக்கிறது.

இந்நிலையில் தைவானில் உள்ள ஒரு நிறுவனம் உபயோகப்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மூலம் செல்போன் சார்ஜர் பாகங்களை தயாரித்திருக்கிறது. அதாவது குப்பையில் வீசப்படும் முக கவசங்களை துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் குழம்புடன் இணைத்து செல்போன் சார்ஜர்களின் மேல் பாகங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்காக, 10,000 உபயோகப்படுத்தப்பட்ட முக கவசங்களை சேமித்து அவற்றை தூய்மைப்படுத்தி, துண்டுகளாக்கி சுமார் 40,000 கம்பியில்லா செல்போன் சார்ஜர்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |