Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க வந்தாங்க” சித்ரா ஆவியோடு பேசிய சார்லி…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!

ஆவி நிபுணரிடம் சித்ராவின் ஆவி பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா விடுதியில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. ஆனால் சித்ரா மிகவும் தைரியமானவர். தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை  என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் நீடித்துள்ளது. சித்ராவின் திடீர் மரணத்தில் இருந்து இன்று வரை அவருடைய ரசிகர்கள் மீளாத்துயரில் உள்ளனர். இந்நிலையில் EVP மூலமாக பேசிய ஆவி நிபுணரான சார்லி சித்ராவின் ஆவியோடு பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த வீடியோவில் சார்லியின் கேள்விக்கு சித்ரா ஆவி பதில் அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. உங்கள் மரணத்திற்கான காரணம் என்று சித்ராவிடம் சார்லி கேட்க, அதற்கு சித்ராவின் ஆவி “அதை என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் மோசமானது. அவங்க வந்தாங்க. தனிமையாக உணர்கிறேன். எனக்கு அன்பு வேண்டும்” என்று மட்டும் கூறியுள்ளார். அதற்குமேல் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பினால் என்று கேட்டபோது “எல்லாம் முடிந்துவிட்டது” என்று சித்ராவின் ஆவி கூறியதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில் “they” கூறும் ஒரு நொடி சித்ராவின் குரல் வந்து செல்கிறது. இதாய் நம்ப மறுத்தாலும் ஒரு சிலர் நம்புகின்றனர்.

Categories

Tech |