அசாம் மாநிலம் தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பி அங்கிருந்தவர்களை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள தேசியப் பூங்காவான காஸிரங்கா தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பியது. அந்த புலி அப்பகுதியில் இருந்த இரண்டு பேரை பிடித்து கடித்து காயப்படுத்தியது. மேலும் தப்பி ஓடிய புலிகளை பிடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.