வாட்ஸப் பயனாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இதழ் தெரிந்துகொள்வோம்.
உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான சமூக செய்தி பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் மூலம் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, ஆடியோ, படம், வீடியோ ஆகிய பைல்களையும் அதன் பயனர்கள் அனுப்ப முடியும்.
மேலும் வாட்ஸ் ஆப்-ல் சேட் செய்வதும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இது எண்ட் டு எண்ட் குறியாக்கத்தைக் கொண்டுள்ளதால், உங்கள் சேட்-ஐ மூன்றாம் நபரால் பார்க்க முடியாது, ஆனால் இன்னும் கூட 1400 வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதாகவும், தரவுகள் கசிவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படும் தவறுகளால், தகவல்கள் கசிந்து விடுகின்றன. அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
நமது தொலைபேசியில் பலரது தொடர்பு எண்கள் இருக்கும். அவற்றில் பல நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும். எனவே அது போன்ற வாட்ஸ் ஆப் எண்களை நீங்கள் பிளாக் செய்துவிட்டால் உங்கள் புகைப்படங்கள், எண்கள் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை பாதுகாக்க முடியும்.நாம் அவ்வப்போது வாட்ஸ் ஆப் டிபிக்களை மாற்றுவது வழக்கம்.
இப்போதெல்லாம், தொழில்நுட்பத்தின் உதவியுடன், பல தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன, எனவே உங்கள் டி.பியை நமது தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் பார்க்குமாறு மாற்றி அமைக்கவும். வாட்ஸ்அப்பின் சிறந்த அம்சம் வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸ், ஆனால் இதை அனைவரும் அணுக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையும் உங்கள் தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் வாட்ஸ் ஆப்-ல் இரண்டு படி சரிபார்ப்பை செய்யவும். இது உங்கள் பயன்பாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். அதை இயக்க 6 இலக்கங்களின் குறியீடு உள்ளிடப்பட்டுள்ளது. நீங்கள் அதை அணுகும்போது, உங்கள் வாட்ஸ்அப் குறியீடு இல்லாமல் திறக்கப்படாது.
உங்கள் தனியுரிமையை மேலும் பாதுகாக்க, வாட்ஸ் அப் குரூப் அம்சத்தை பிளாக் செய்யலாம். நீங்கள் Settings-ல் Group என்பதை தேர்ந்தேடுத்து, from everyone என்பதை மாற்றி, My Contact என்பதை தேர்வு செய்யுங்கள், இதற்குப் பிறகு உங்கள் அனுமதியின்றி யாரும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாது.