Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

”மலிவு விலை நானோ கார்” 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனை ….!!

மலிவு விலையிலான நானோ கார் 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாடா 2009ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மலிவுவிலை காரான நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். காரின் விலை 1 லட்சம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. பின்னர் காரில் தீவிபத்து ஏற்படுவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் புகார்கூறியதையடுத்து விற்பனை மந்தமானது.

நானோ கார் தயாரிப்பினால் ரூ. 1000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதால் அந்நிறுவனத்தின் தலைவராகயிருந்த மிஸ்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |