மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தராததால் சங்கர் பலமுறை அவர்களை தொடர்புகொண்டு கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கும் இருவரும் சரியாக பதில் அளிக்காததால் சங்கர் அமைந்தகரை காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரித்தபோது சங்கரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததை அவர் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.