Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுக்கு ரத்தம் தேவைப்படும்” ஏமாற்றிய மூதாட்டி… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து மூதாட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மகள் ஷீலாவுடன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஷீலா அணிந்திருந்த கம்மல், தாலி சங்கிலி, 2000 ரூபாய் பணம் போன்றவற்றை மணிபர்சில் வைத்துக்கொண்டு பிரசவ வார்டுக்கு வெளியே சாந்தி அமர்ந்திருந்தார். அப்போது 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது பெயர் மல்லிகா எனவும் பிரசவத்திற்காக தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் சாந்தியிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பிரசவத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படும் எனவும், அதனை வாங்கி வரலாம் எனவும் மல்லிகா சாந்தியிடம் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சாந்தி அவருடன் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்ற பிறகு மல்லிகா தங்க நகைகளை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லக்கூடாது என சாந்தியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தான் பணம், நகை வைத்திருந்த மணிபர்சை சாந்தி மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு ரத்த வங்கிக்குள் சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மல்லிகா அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி சாந்தி அடைந்தார். இதுகுறித்து சாந்தி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் மோசடி செய்த மூதாட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |