Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உதவியா இருப்பான்னு நினைத்தோம்” அதிர்ச்சியடைந்த தம்பதியினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வயதான தம்பதிகளிடமிருந்து தனியார் காப்பக ஊழியர் 24 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பம்மல் வ.உ.சி நகர் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்-மீனாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் தனியார் காப்பக ஊழியரான குழந்தைசாமி என்பவரை மருத்துவ உதவிக்காக இந்த தம்பதியினர் வீட்டு வேலை பணியில் அமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து வீட்டு வேலையுடன் சேர்த்து தனது வங்கி கணக்கில் உள்ள வரவு-செலவு கணக்குகளை பார்க்குமாறு குழந்தை சாமியிடம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன் பின் அதிக அளவிலான பணம் தனது வங்கி கணக்கில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதை சுப்பிரமணியன் அறிந்துள்ளார்.

இதுகுறித்து குழந்தை சாமியிடம் கேட்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு குழந்தைசாமி கள்ளக்குறிச்சிக்கு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுப்பிரமணியன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான குழந்தைசாமியை தேடி கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் இருந்து 24 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாக குழந்தைசாமி காவல் துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

Categories

Tech |