கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததால்,காசி அரங்கேற்றிய காதல் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளார்.முன்னதாக பெண் மருத்துவர் அளித்த புகாரை தொடர்ந்து, 6 பெண்கள் காசி மீது காவல் துறையினரிடம் புகாரளித்தனர். இதையடுத்து காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சிபிசிஐடி காவல் துறையிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காசியின் இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.தற்போது புதிதாக பெண்ணொருவர் அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க, காசியை பத்து நாள் காவலில் எடுக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில், சிபிசிஐடி காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.