கொய்யா ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள் :
கொய்யா பழம் – 1/4 கிலோ
கோவா எசன்ஸ் – 2 துளிகள்
எலுமிச்சம் பழம் – 1/2
சர்க்கரை – 100 கிராம்.
தண்ணீர் – தேவையான அளவு.
உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தண்ணீரில் கொய்யாப்பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, எசன்ஸ் சேர்த்து வடிகட்டினால் சுவையான கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!