காசோலை சரிபார்ர்பை எளிதாக்க சிடிஸ் என்ற புதிய அமைப்பு அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இன்றைய கூட்டத்தில் காசோலை பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. காசோலையை எளிதாக சரிபார்ப்பதற்காக சிடிஎஸ் முறையில் அனைத்து வங்கிகளும் விரைவில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய வங்கிகளில் மட்டுமே காசோலை சரிபார்ப்பிற்கான சிடிஎஸ் வசதி உள்ளது. அதை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து வங்கிகளுக்கும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் சிடிஎஸ் அமைப்புகள் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி இல்லாத அனைத்து வங்கிகளிலும் விரைவில் கொண்டு வரப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் காசோலை பரிவர்த்தனை எளிதாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் காசோலை சரிபார்ப்புக்கான கால அவகாசமும் குறையும். ஒரு வங்கிகளில் டெபாசிட் செய்தவுடன் அந்த காசோலையை சரிபார்க்க காசோலை மையங்களுக்கு அனுப்பப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். ஆனால் இந்த முறையில் காசோலையின் போட்டோ காபி மட்டுமே ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இந்த காசோலை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது கிடையாது. இதுபோன்று எலக்ட்ரானிக் முறையில் தகவல்களை அனுப்புவதால் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதோடு செலவுகளும் அதற்கான நேரமும் குறையும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்த வங்கியின் மூலமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை எளிதாகும்.